அமேசான் தீ விபத்து திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதா?

Wednesday, August 28th, 2019


தீயில் கருகிய அமேசான் காடுகள் மறுசீரமைப்புக்காக ஜி 7 நாடுகள் சார்பில் 20 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய மழைக்காடுகள் கொண்ட அமேசானில் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் தீவிபத்துகள் உலக நாடுகளுக்கு கவலையை அதிகரித்துள்ளன. சுற்றுச்சூழல் பிரச்சினைகளை சுட்டிக் காட்டி உலக நாடுகள் பிரேசில் அரசுக்கு கடும் நெருக்குதல் கொடுத்து வருகின்றன.பிரான்சும் பிரேசிலும் கடும் சொற்போரில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த அறிவிப்பை அடுத்து சர்வதேச நிதியை நிராகரித்த பிரேசில் அதிபர் போல்சோனாரோ, தங்கள் நாட்டின் இறையாண்மையின் மீது அமேசானை காரணமாக வைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றம் சாட்டினார். பிரேசிலை யாருமற்ற காலனி பிரதேசமாக கருத வேண்டாம் என்று கூறியுள்ள பிரேசில் அதிபர் உலகநாடுகளின் உதவியை நிராகரித்துள்ளார்.

Related posts: