சீரற்ற காலநிலை தொடர்வதால் டெங்கு பரவும் வேகமும் அதிகரிப்பு!
Thursday, November 18th, 2021
டெங்கு காய்ச்சலினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
நிலவும் மழையுடனான வானிலையினால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக நாளொன்றில் 5 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வந்த நிலையில், தற்போது ஒரு நாளில் 25 இற்கும் அதிகமானவர்கள் அனுமதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, டெங்கு நோய்ப்பரவல் தொடர்பில் பெற்றோரை அதிக கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
வளிமண்டலவியல் திணைக்களம் நவீனமயப்படுத்தப்படும் - அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா!
கிளிநொச்சியில் விபத்து - இளைஞன் படுகாயம்!
நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு டெங்கு தொற்று அச்சுறுத்தல் அதிகரிப்பு !
|
|
|


