எரிபொருள் தேவை 50 வீதத்தால் குறைந்துள்ளது – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

Tuesday, December 27th, 2022

இந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், வருட இறுதிக்குள், நாட்டில் எரிபொருள் தேவை ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய சட்டபூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் நுகர்வு கணிசமாகக் குறைக்கப்பட்டதும், Q.R. அமைப்புக்கு மட்டுமே எரிபொருள் வெளியிடப்படுவதாலும், எரிபொருள் இருப்புகளை சேமிக்க நுகர்வோர் செயற்படாததாலும் எரிபொருள் தேவை குறைந்துள்ளது.

இந்த வருடத்தின் முதற்பாதியில் மாதம் ஒன்றுக்கு சுமார் நான்காயிரம் மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் டீசல் தேவை இருந்த நிலையில் தற்போது அது இரண்டாயிரம் மெட்ரிக் தொன்னாக குறைந்துள்ளதாக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், கடந்த மார்ச் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில், தினசரி டீசல் நுகர்வு ஆறாயிரத்து நானூறு மெட்ரிக் தொன்னில் இருந்து இரண்டாயிரத்து இருநூறாகக் குறைந்துள்ளது.

பெற்றோல் நுகர்வும் மூவாயிரத்து எழுநூறிலிருந்து ஆயிரத்து இருநூறு மெட்ரிக் தொன்னாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: