தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அக்கறை – அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவிப்பு!

Friday, June 26th, 2020

புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

சகோதர மொழி தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முன்பதாக தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வஷேட பிரதிநிதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களை சந்தித்து  மகர் ஒன்று கையளித்திருந்ததுடன் விடுதலை தொட்ர்பிலும் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தனர் அத்துடன் காணாமல் போனோரின் உறவுகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து பரிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்றும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது..

இதனிடையே பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 15 பேர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மைதானத்தில் அழைத்து சென்று கைதிகளுக்கு அதிகாரிகள் உடற்பயிற்சி கொடுத்து வருகின்றனர்.

எனினும் ஒரு கைதி மற்றோரு கைதியை பார்க்க முடியாத வகையில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் வெளியே அழைத்துச் செல்லும் நேரத்தை அதிகரிக்கும் படியே மேற்படி கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் நேற்றுமுதல் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கபப்டுகின்றது.

Related posts: