மூன்று மாதத்தில் 91 பேர் எச். ஐ. வி யினால் பாதிப்பு!

Friday, May 4th, 2018

2018 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் எச்.ஐ. வி நோயினால் பாதிக்கப்பட்ட 91 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுள் 31 பேர் ஆண்கள் எனவும் தேசிய பாலியல் நோய்மற்றும் எயிட்ஸ் திட்டம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் நாடு முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என்று அதன் பணிப்பாளர் விசேட வைத்தியர் திலானிராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமது நடவடிக்கை குறித்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதன் காரணமாக தாயின் மூலமான குழந்தைக்கு எச். ஐ. வி யின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும்  இதனால் தாயிடம் இருந்துகுழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு தவிர்க்கப்பட்ட நாடாக உலக சுகாதார அமைப்பின் சான்றிதழை பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டின் இந்தக் காலப்பகுதியில் எச். ஐ. வி யினால் பாதிக்கப்பட்ட 75 பேர் அடையாளம் காணப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: