இரு அமைச்சுகளின் விடயதானங்களில் மாற்றம் – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Tuesday, March 15th, 2022

கைத்தொழில் மற்றும் சுற்றாடல் அமைச்சுகளின் விடயதானங்களை மாற்றியமைத்து வர்த்தமானி அறிவித்தல’ ஒன்றை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

அதன்படி கைத்தொழில் அமைச்சின் கீழ் 15 நிறுவனங்களும் சுற்றாடல் அமைச்சின் கீழ் 5 நிறுவனங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கமைய சுற்றாடல் அமைச்சுடன் இலங்கையின் காலநிலை நிதியம் இணைகிறது.

தற்போது பூமிக்கடியில் மற்றும் சமுத்திரத்தினுள் உள்ளதெனக் கருதப்படும் கனிய வளங்களை நவீன உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ந்து நாட்டின் உற்பத்திச் செயற்பாடுகளை வலுவூட்டும் பணி சுற்றாடல் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த செயல்முறை முன்பு கைத்தொழில் அமைச்சின் கீழ் இருந்த நிலையில், இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் அது சுற்றுச்சூழல் அமைச்சுடன் இணைக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: