அனைத்து தலைமைத்துவத்திலிருந்தும் விலகத் தயார் – ரணில்!
Thursday, November 21st, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் விலக தயார் என பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ள ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் அதற்கு பெரும்பான்மையானோர் விருப்பம் வெளியிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் சிறிய தரப்பினரின் அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக தான் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக தயார் இல்லை என தெரிவித்துள்ளார்.
கட்சியின் நிறைவேற்று குழுவின் பெரும்பான்மையானோர் தன்னோடு இருப்பதாகவும் அவர்கள் மேற்கொள்ளும் தீர்மானத்திற்கு தலை வணங்குவதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக தனது ராஜினாமா கடிதத்தை ரணில் கையளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
சட்டவிரோத மதுபானத்தை முழுமையாக ஒழிக்க விரைவில் புதிய சுற்றுநிரூபம் – ஜனாதிபதி!
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் கடலில் மூழ்கி வருகிறது - எண்ணெய் கசிந்தால் கடலுக்கு ஆபத்து என இலங்கை கடற்சூ...
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது பொலிஸாரின் கடமையே தவிர இராணுவத்தின் கடமை அல்ல – இராணுவ தளபதி ஷவேந்திர சில...
|
|
|


