மரக்கறிகளின் விலை திடீரென அதிகரிப்பு!
Wednesday, November 28th, 2018
மரக்கறிகளின் விலை நாளாந்தம் அதிகரித்துச் செல்வதாக புறக்கோட்டை மற்றும் மெனிங் சந்தையின் வர்த்தகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
ஒரு கிலோகிராம் கரட், கறிமிளகாய் ஆகியவற்றின் விலை 300 ரூபா வரை அதிகரித்துள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் காமினி ஹந்துன்கே கூறியுள்ளார்.
மேலும் ஒரு கிலோகிராம் பச்சைமிளகாய் 500 ரூபா முதல் 550 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் புறக்கோட்டை மெனிங் சந்தையின் வர்த்தகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
வாழ்வாதார உதவியில் முறைகேடு: பயனாளிகள் பரிதாபம்!
தென்னாப்பிரிக்காவை முன்னுதாரணமாகக் கொண்டு, - உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அமைச்சரவை அங்கீ...
திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 1 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ப...
|
|
|


