திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 1 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு!

Friday, June 30th, 2023

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

23 ஜூன் 2023 திகதியிட்ட 2337/27 என்ற அதிவிசேட வர்த்தமானி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவுக் கட்டணங்கள் மற்றும் முகவர் புதுப்பித்தல் கட்டணங்களைத் திருத்தியுள்ளது.

இதேவேளை, வேலைக்காக வெளிநாடு செல்லும் ஒவ்வொரு இலங்கையர்களும் பணியகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், பணியகம் ஒரு வருட காலத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்துவதற்கான உரிமங்களை வழங்குகிறது, மேலும் நிறுவனம் தொடர்ந்து இயங்கினால், உரிமத்தை நீடிக்க பணியகத்தின் ஒப்புதல் சட்டத்தின் விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.

பணியகத்தின் 24 மணி நேர தகவல் மையத்தின் ஹொட்லைன் எண் 1989 ஐ அழைப்பதன் மூலம் கூடுதல் தகவல்களைப் பெறமுடியும்.

அத்துடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலின்படி, 27.06.2023 அன்று தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட உத்தரவின்படி திருத்தப்பட்ட கட்டணங்களாக –

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பதிவு கட்டணம் தற்போது வரிகள் உட்பட 17.928 ரூபாவாகச உள்ள கட்டணம்  புதிய கட்டணமாக வரிகள் உட்பட 21,467 ஆக அதிகரித்துள்ளது

அதேபோன்று பதிவு புதுப்பித்தல் கட்டணம்

தற்போது வரிகள் உட்பட 3,774 ரூபாவாக உள்ள கட்டணம் புதிய மதிப்பாக வரிகள் உட்பட 4,483 ரூபாவாக அதிகரித்துள்ளது

இதேவேளே வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிப்பதற்கான இதுவரை இருந்தவரும் வரிகள் உட்பட 58,974 கட்டணம் புதிய மதிப்பாக வரிகள் உட்பட 117,949 ரூபாவாக அதிழகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: