விஷேட தேவையுடைய இளைஞர் யுவதிகளின் வாழ்க்கைத் தொழில் திறன்களினை மேம்படுத்துவதற்காக தொழிற்பயிற்சி நிலையம் திறந்துவைப்பு!

Thursday, December 2nd, 2021

ஜனாதிபதியின் வழிகாட்டலில் விஷேட தேவையுடைய இளைஞர் யுவதிகளின் வாழ்க்கைத் தொழில் திறன்களினை மேம்படுத்துவதற்காக வாழச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கும்புறுமூலையில் தொழிற்பயிற்சி நிலையம் இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய்கள் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்  சுதர்சினி பெனார்ந்தோபுள்ளே பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிலையத்தினை திறந்து வைத்தார்.

குறித்த நிலையம் ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய்கள் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் 141 மில்லியன் நிதி உதவி மூலம் அமைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் ஒன்பதாவது நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .

விஷேட தேவையுடைய இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த தொழிற்பயிற்சி நிலையம்  மாணவர்களுக்கு தையல் பயிற்சி மற்றும் மின் உபகரண திருத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. 

16 வயது தொடக்கம் 35 வயதுக்கு இடைப்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் தங்குமிடம், சாப்பாட்டு வசதிகள், தினசரி பராமரிப்பு உள்ளிட்டவை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

தையல் பயிற்சி மற்றும் மின் உபகரண திருத்தல் போன்ற பயிற்சி நெறிக்கான உபகரணங்களுக்கான நிதியுதவியினை ஊhடைன கரனெ நிறுவனம் வழங்கியுள்ளது.

இந் நிகழ்வில் பிரதேச பாடசாலை மாணவர்ளால் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு அவர்களுக்கு பிரதம அதிதியால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் அதிதிகளால் பழ மர கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: