சமையல் எரி வாயு விநியோகம் நாளை முதல் வழமை போன்று நடைபெறும் – லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!
Monday, November 15th, 2021
நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவின் விநியோகம் , நாளைமுதல் வழமை போன்று இடம்பெறும் என்று லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.
தற்போது மேல் மாகாணத்தில் சமையல் எரிவாயுவின் விநியோகம் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகள் 4 நாட்கள் தடைப்பட்டதன் காரணமாகவே சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நல்லூர் வீதிகள், பொது இடங்களில் குப்பை போட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!
பாடசாலை மாணவர்களுக்கான உயர் போஷாக்கை கொண்ட அரிசி - கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு மன்னிப்பு வழங்கத் தயார்! பேராயர் கர்தினால் மெல்...
|
|
|


