டெல்டா உள்ளிட்ட புதிய வைரஸ்கள் எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையும் : இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண எச்சரிக்கை!

Monday, August 16th, 2021

இலங்கையில் டெல்டா வைரஸ் பரவல் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ள அதே வேளை, டெல்டா வைரஸ் மாத்திரமின்றி ஏனைய புதிய நிலைமாறிய வைரஸ்கள் தோன்றக்கூடிய ஆபத்துகள் காணப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இது குறித்து  அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய “ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ள பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும். அதேநேரம் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளின்றி வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் நிலைமை மிக மோசமாகி விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: