பல மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்!
Tuesday, May 28th, 2019
நாட்டின் மேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணத்தில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
Related posts:
புகையிரதங்களில் பொதிகளை கொண்டு செல்வதற்கு தடை நீக்கப்படுவதாக அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்!
அனர்த்தம் மற்றும் அவசர சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் வாகனங...
|
|
|


