தரம் ஐந்திலுள்ள அக்கறை உயர்தரத்தில் இல்லை!

Tuesday, October 24th, 2017

தரம் 5 இருக்கும் அக்கறை சாதாரணதரம்இ உயர்தரம் ஆகியவற்றில் மாணவரும் சரி பெற்றோரும் சரி கவனம் எடுப்பதில்லை. அதனாலேயே யாழ்ப்பாணம் கல்வியில் பின்னடைவைச் சந்தித்துள்ளது என யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை மதிப்புறுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.அன்பொளி கல்வியகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் – ஆரம்ப காலத்தில் யாழ்ப்பாணம் கல்வியில் முன்னிலை பெற்றிருந்தது. தற்போது கல்வியின் தரம் பின்தங்கியுள்ளது.மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யும் வீதமும் குறைவாகவே காணப்படுகின்றது.பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளில் பெற்றோர்கள் கரிசனையுடன் அயராது உழைக்கவேண்டும் – என்றார்.

Related posts: