விமான நிலைய மீள திறக்கும் திகதி காலவரையறையின்றி ஒத்திவைப்பு – அமைச்சர் பிரசன்னா ரணதுங்க!

Sunday, September 13th, 2020

சுற்றுலா பயணிகளுக்கும் வியாபார விவகாரங்களுக்கும் இலங்கை வருபவர்களுக்கும் விமான நிலையத்தினை திறக்கும் திகதியை, காலவரையறையின்றி ஒத்திவைத்திருப்பதாக இலங்கை அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன..

அத்துடன் விமான நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்து அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளதாகவும் ◌தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சகம் மற்றும் கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPC) ஆகியவற்றின் ஒப்புதல் பெற்ற பின்னரே விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும், எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் விமானநிலையம் மீளதிறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் அது செப்ரெம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: