04 கப்பல் டீசல் தொகையைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!
Tuesday, September 26th, 2023
எதிர்வரும் நான்கு மாதகாலத்திற்கு 04 கப்பல் டீசல் தொகையைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2023.11.01 ஆம் திகதி தொடக்கம் 2024.02.29 ஆம் திகதி வரைக்கும் தொடர்ந்துவரும் நான்கு (04) மாதகாலத்திற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 04 கப்பல் டீசல் தொகையைக் கொள்வனவு செய்வதற்காக நீண்டகால ஒப்பந்த முறையின் கீழ் விலைமுறி கோரப்பட்டுள்ளது.
அதற்காக 05 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய M/s Petrochina International (Singapore) Pte. Ltd. இற்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பூநகரி முழங்காவில் பகுதி காணி பதிவுகளை சீராக முன்னெடுக்கவென காணி கச்சேரியொன்றை நடாத்த திட்டம்
நாவற்குழி உணவுக் களஞ்சியசாலையை பல்பொருள் விற்பனை நிலையமாக புனரமைக்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்...
சமூக நலத்திட்டத்தின் கீழ் 800,000 குடும்பங்கள் இன்னும் ஜூலை மாதம் தொடர்பான சமுர்த்தி மற்றும் ஏனைய கொ...
|
|
|


