அவதானமாக செயற்படவில்லை என்றால் இந்தியா போன்று இலங்கையிலும் மோசமடையும் – வைத்திய பரிசோதனை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் எச்சரிக்கை!

Saturday, October 10th, 2020

மக்கள் அவதானமாக செயற்படவில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் இந்தியா போன்று இலங்கையிலும் நோயாளர்கள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக வைத்திய பரிசோதனை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார எச்சரித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் கொரோனா நோயாளர்கள் சமூக மட்டத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர் –

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் கொரோனா தொற்றாளர்கள் எங்குள்ளார்கள் என்பதனை உறுதியாக கூற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான ஆபத்தான சூழ்நிலையில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செய்யப்பட வேண்டும்.

இச் சூழ்நிலையில், மக்கள் அவதானமாக செயற்படவில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் இந்தியா போன்று இலங்கையிலும் நோயாளர்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டமையினால், தன்னை அமைதியாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மீண்டும் அந்த பதவியை தான் ஏற்க மாட்டேன் என்று குறிப்பிட்ட அவர், பதவியின்றி மக்களை காப்பாற்ற தன்னால் முடிந்தவற்றை செய்வதாகவும் வாக்குறுதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: