இலங்கையில் “ட்ரிப்பனசொமா” விசர்நாய்கடி தொற்று நோய் பரவும் அபாயம்!

Thursday, January 10th, 2019

இலங்கையில் அறியப்படாத ட்ரிப்பனசொமா எனப்படும் விசர்நாய்கடி தொற்று நோய் தற்போது இரண்டு நாய்களிடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக வைத்திய பீடத்தின் பேராசிரியர் அசோக தங்கால்ல தெரிவித்துள்ளார்.

இந்த நோய் தற்போது முல்லைத்தீவு மற்றும் பலாங்கொடை பகுதியிலிருந்து மருத்துவத்திற்காக கொண்டுவரப்பட்ட நாய்களிடமிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ட்ரிப்பனசொமா” எனப்படும் இந்த விசர்நாய்கடி தொற்று நோயானது ஆபிரிக்க நாடுகளில் உள்ள தொற்றுநோயாகும்.

குறித்த நாய்களின் இரண்டு கண்களும், வெள்ளை நிறமாக காணப்பட்டதுடன், உடல் மெலிந்து காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த நோய் மனிதர்களுக்கு பரவும் அச்சம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விலங்குகளுக்கு ஏற்படும் நோயிலிருந்து, மனிதர்களுக்கு பரவும் நோய்கள் குறித்து மிருக வைத்தியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக வைத்திய பீடத்தின் பேராசிரியர் அசோக தங்கால்ல தெரிவித்துள்ளார்.

Related posts:


உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரே தமிழ் அரசியல் தலைவர் டக்ளஸ் தேவானந்தா - கிழக்கு மக்கள் பெருமிதம்! ...
மீண்டுமொரு கொரோனா அலையை பண்டிகைக்காலமே தீர்மானிக்கும் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்ச...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டார் ஜனாதிபதி!