போதைக்கு அடிமையான 10,000 பேருக்கு ஒரே நேரத்தில் புனர்வாழ்வு – 250 புனர்வாழ்வு நிலையங்களை இம்மாதம் திறக்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை!

Monday, March 4th, 2024

போதைக்கு அடிமையான 10,000 பேருக்கு ஒரே நேரத்தில் புனர்வாழ்வு அளிக்கும் நோக்கில் 250 புனர்வாழ்வு நிலையங்களை இம்மாதம் திறக்க பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

மகா சங்கத்தினர் மற்றும் கத்தோலிக்க, இஸ்லாமிய, இந்து மத குருமார்களின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் போதைப்பொருளுக்கு அடிமையான 50 பேரை ஒரு மையத்தில் தங்க வைக்கும் மையங்கள் நிறுவப்படும்.

போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்கள் போதைப்பொருளில் இருந்து மீள்வதே புதிய வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என கண்டியில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போது தெரிவித்துள்ளார்.

நாட்டில் 100,000 பேர் அனைத்து விதமான போதைப் பொருட்களுக்கும் அடிமையாகி உள்ளதாகவும், ஆனால் வருடாந்தம் 4700 பேர் புனர்வாழ்வளிக்கப்படுவதாகத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், அது நியாயமானதல்ல என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கந்தகாடு மையத்தில் நடந்ததைப் போன்று முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


ஆனையிறவு உப்பளம் மீண்டும் செயற்படும் காலத்தை நாம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றோம் - மாசார் மக்கள்!
எரிந்த New Diamond கப்பலின் எண்ணெய் கசிவினால் கடலாமைகளுக்கு அச்சுறுத்தல் - நாரா நிறுவனம் அறிவிப்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவது சாத்தியம் - சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவு...