வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் திருத்தச் சட்டமூலத்திற்கு ஒப்புதல்!
Wednesday, March 15th, 2023
சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் திருத்தச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
உள்ளூர் விமான சேவையின் பாதுகாப்புக்கு ஏற்புடைய சட்ட வரையறைகளைப் புதுப்பித்தல், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், மற்றும் உள்ளூர் விமான சேவைகளுக்கான பொறுப்பு வரையறைகளை அடையாளம் காண்பதற்காக குறித்த சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக கடந்த ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இந்தநிலையில், குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு, நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உயர்தர பரீட்சை பெறுபேற்று ஆவணங்களை பாடசாலைகளில் காட்சிப்படுத்த நடவடிக்கை - பரீட்சைகள் திணைக்களம்!
இன்று முன்னிரவு 8 மணிமுதல் 26ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நாடு முழுவதும் மீண்டும் அமுலுக்கு வரும் ஊரடங...
அவசர சிகிச்சை பிரிவுகளில் 186 கொரோனா நோயாளர்கள் - சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர் தெரிவிப்ப...
|
|
|


