உயர்தர பரீட்சை பெறுபேற்று ஆவணங்களை பாடசாலைகளில் காட்சிப்படுத்த நடவடிக்கை – பரீட்சைகள் திணைக்களம்!

Monday, December 30th, 2019

கடந்த வாரம் வெளியிடப்பட்ட கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேற்று ஆவணங்கள் இன்று முதல் பாடசாலைகளில் காட்சிப்படுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சையின் பெறுபேற்று ஆவணங்கள் கடந்த வார இறுதியில் பாடசாலைகளுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயர் கல்வி நடவடிக்கைகளுக்காக இந்த பெறுபேற்று ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன், குறுந்தகவல் சேவை ஊடாக வெளிநாடுகளில் வசிப்போர் தமது பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பரீட்சைகள் திணைக்களத்தின் ஒருநாள் சேவை ஊடாகவும் பெறுபேற்று ஆவணங்கள் விநியோகிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

இதேவேளை பல்கலைக்கழகத்திற்காக மாணவர்களை இணைக்கும் போது மாவட்ட அடிப்படையில் புள்ளிகள் பரிசீலிக்கப்படும் முறையில் பிரச்சினை காணப்படுவதாக கல்வி சேவை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: