இலங்கை வெளிவிவகார அமைச்சு இடமாற்றம் !
Monday, September 19th, 2016
வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தை வேறு இடமொன்றில் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சை ஜாவத்தையில் அமைக்க மேற்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஜாவத்தையில் அமைந்துள்ள 02 ஏக்கர் அளவிலான இடப்பகுதி ஒன்றினை வெளிவிவகார அமைச்சுக்கு ஒதுக்கிக் கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் மேற்படி அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டது.
தற்போது கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள கட்டடமானது பிரித்தானியர் ஆட்சியின் போது நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
தகவலறியும் உரிமை தொடர்பாக பாட விதானங்களிலும் சேர்க்கப்படும் - ஆணைக்குழுவின் பணிப்பாளர்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற ஊடாடும் உரையாடலில் இலங்கைக்கு அமோக ஆதரவு!
மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை பூட்டி வைத்த கடை உரிமையாளர் யாழ்ப்பாண பொல...
|
|
|


