ஜுன் மாதத்திற்குள் கொரோனகா தொற்றின் தாக்கம் உச்சம்பெறும் – சுகாதார தரப்பு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!
Monday, May 24th, 2021
இலங்கையில் எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு ஏற்படும் சடுதியான அதிகரிப்பை, சுகாதார தரப்பினால் தாங்கிக்கொள்ள முடியாது என அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் செனால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இதனால், எதிர்வரும் இரு வாரங்களுக்கு நாடு தழுவிய ரீதியில் முழுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டில் 20 பேருக்கு ஒரு முச்சக்கர வண்டி!
தகவல்களை மறைப்பதனால் உரிய சிகிச்சை வழங்குவதில் பாரிய சிக்கல் நிலை உருவாகியுள்ளது - சுகாதார பணிப்பாளர...
இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 935 ஆக உயர்வு!
|
|
|


