இன்று முன்னிரவு 8 மணிமுதல் 26ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நாடு முழுவதும் மீண்டும் அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டம் – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு!

Saturday, May 23rd, 2020

கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல்வரை வரை தொடரும் நிலையில், ஏனைய 23 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு இன்று சனிக்கிழமை முன்னிரவு 8 மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 25ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய இரு தினங்களிலும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களிலும் நாளை இரவு 8.00 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம், 26ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் முந்தைய அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் மாறாமல் உள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் நாளை மற்றும் நாளைமறுதினம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 900 தடுப்புக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: