வாக்கு சீட்டுக்களை அச்சிடுவது அரச அச்சகத்தின் கடமை – தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டு!
Thursday, February 16th, 2023
முன்னர் எந்த சந்தர்ப்பத்திலும் வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்காக நிதி வழங்குமாறு அரச அச்சகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிபக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசின் பங்குதாரராக அரச அச்சகமும் செயற்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனவே அதற்கான வாக்கு சீட்டுக்களை அச்சிடப்பட வேண்டியது அரச அச்சகத்தின் கட்டாய செயற்பாடு என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
இதனால், இந்த முறை வாக்கு சீட்டு அச்சிடுவதற்காக நிதி கோருகின்றமை ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடாகும் என அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தவில்லை!
வெளிவிவகார தொடர்புகளை வலுப்படுத்த இலங்கை - ரஷ்ய பேச்சுவார்த்தை!
கொரோனா பரவலுக்கு முகங்கொடுப்பதற்கான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார் - இந்தியா உறுதிமொழி!
|
|
|


