கொரியாவில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பிற்கு விசேட திட்டம்!

Tuesday, April 25th, 2017

கொரியாவில் யுத்த நிலையொன்று ஏற்படுமாயின் அங்குள்ள இலங்கை பணியாளர்கள் அனைவரையும் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரவிசேட வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவில் மீன்பிடி மற்றும் கைத்தொழில் துறையில் தற்போதைய நிலையில் சுமார் 26 ஆயிரம் இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றனர். எவ்வாறாயினும், அவர்களின் பாதுகாப்புபை உறுதி செய்யும் வகையில் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக எமது செய்திப்பிரிவை தொடர்பு கொண்ட அமைச்சர் தெரிவித்திருந்தார்.

Related posts: