கொரோனா பரவலுக்கு முகங்கொடுப்பதற்கான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார் – இந்தியா உறுதிமொழி!

Sunday, April 11th, 2021

தற்போதைய சூழ்நிலையில், கொரோனா பரவலுக்கு முகங்கொடுப்பதற்கான உலகளாவிய போராட்டத்தின் போது, முன்நின்று அனைத்து உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொரோனா தடுப்புமருந்து தொடர்பில் எழுப்பப்பட்டுவரும் கேள்விகளுக்கு, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடகப்பேச்சாளர் பதில் வழங்கிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றுப்பரவலுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடும் கடப்பாட்டின் கீழ் 85 நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அமைதிகாக்கும் படையினருக்கும் இந்தியா கடந்த வெள்ளிக்கிழமை 64.51 மில்லியன் கொரோனா தடுப்புமருந்துகளை வழங்கியது.

இதன்கீழான தடுப்பு மருந்துகள் கடந்தவாரம் ஆசிய, பசுபிக் மற்றும் தென் அமெரிக்க பிராந்தியங்களிலுள்ள நாடுகளிடம் கையளிக்கப்பட்டன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 1.2 மில்லியனுக்கும் அதிக அஸ்ட்ரசெனிகா தடுப்புமருந்து கடந்த ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இலங்கையை வந்தடைந்தன.

இந்நிலையில் கொரோனா பரவலுக்கு முகங்கொடுப்பதற்கான உலகளாவிய போராட்டத்தின் போது, முன்நின்று அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: