கடல் வளத்தினைப் பாதுகாக்கும் பண்பாட்டினை மறந்து விடக்கூடாது: யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்!

Thursday, September 22nd, 2016

கடல் அன்னையின் பாதுகாப்பில் தான் தற்போது யாழ். குடாநாட்டு மக்கள் உயிர் வாழ்ந்து வருகிறார்கள். ஆகவே, கடல் வளத்தினைப் பாதுகாக்கும் பண்பாட்டினை மறந்து விடக்கூடாது. ஆனால், இப்போது நாம் கடல் அன்னையினை மறந்த சமூகத்தினைக்  கட்டியெழுப்பிவருகின்றோம் எனத் தெரிவித்தார் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்.

ஐனாதிபதியின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் தூய கடற்கரை – 2016 வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய கடற்கரை மற்றும் கடல்வளங்களின் பாதுகாப்பு வாரமும் கரையோர தூய்மைப்படுத்தும் செயற்திட்டமும் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(20-09-2016) முற்பகல் யாழ்ப்பாணம் குருநகர்க் கடற்கரைப் பகுதியில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடற்கரையோரங்களில் மக்கள் புனிதத்தினைப்  பேணத் தவறுகின்றனர். அவ்வாறான தன்மையினை மாற்றியமைப்பதன் மூலமே  கடற்கரையோரங்களில் சுத்தம் பேணப்படும் நிலை உருவாகும்.

நாட்டிலுள்ள ஏனைய கடல்வளங்களை விட யாழ். குடாநாட்டுக்  கடல்வளம்தற்போது மிகவும் முக்கியமான தொன்றாகக் காணப்படுகின்றது எனச் சுற்றுலாப்  பயணிகள் எம்முடன் கதைக்கின்ற போது தெரிவிக்கின்றனர். சுற்றுலாப்பயணிகளின் கருத்துக்களின் படி பார்க்கின்றபோது எம்மவர்கள் ஏன் எமது கடல் வளங்களை இன்னும் துப்பரவு இன்றி வைத்துள்ளனர்.  இது  குறித்து எனக்குத் தெரியவில்லை. தற்போது யாழ் .குடாநாட்டில் பத்துப் பெருங்கடல் நிலவோரங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும்  துப்பரவுகள் இன்றிக் காணப்படுகின்றது. இதனை மீட்டெடுக்க நாமனைவரும் எம்மாலான  ஒத்துழைப்புக்களை  வழங்கவேண்டும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

unnamed

Related posts:


மே மாதம்முதல் சதோச நிறுவனங்கள் கிராமப்புறங்களில் நிறுவப்படும் - அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்...
சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியவகையில் போகம்பறை சிறைச்சாலை புனரமைப்பு - வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலியா ர...
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான அமைச்சரவை உபகுழு நியமனம்!