இலங்கைக்கு புதிய கடனை வழங்க தயார் – சீனா அறிவிப்பு!

Tuesday, April 26th, 2022

சீனாவை பொறுத்தவரை அந்த நாடு, கடன் மறுசீரமைப்பை விரும்புவதில்லை எனினும் தற்போதுள்ள கடன்களை தீர்ப்பதற்கு மற்றுமொரு கடனை வழங்கத் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நாலக கொடஹேவா இன்று தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, அந்த நெருக்கடியைச் சமாளிக்க சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்தநிலையில் ஒரு நாட்டிற்கான கடன் மறுசீரமைப்பை அனுமதிப்பது, ஏனைய நாடுகளை பாதிக்கும் என்பதே சீனாவின் நிலைப்பாடாகும்.

எனவே, தற்போதுள்ள கடனை அடைக்க மற்றொரு கடனை அந்த நாடு முன்மொழிந்துள்ளது. இது ஆரம்ப கட்டத்தில் உள்ளது,

இது தொடர்பில் நிதியமைச்சர் உரிய நேரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிப்பார் என்று கொடஹேவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: