வெளிவிவகார தொடர்புகளை வலுப்படுத்த இலங்கை – ரஷ்ய பேச்சுவார்த்தை!
Monday, January 13th, 2020
இலங்கை வரவுள்ள ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லெவ்ரோவ்க்கும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. அத்துடன், இருதரப்பினரதும் கூட்டு செய்தியாளர் மாநாடு அன்றைய தினம் பகல் 12 மணியிலிருந்து 12.40 வரை வெளிவிவகார அமைச்சில் இடம்பெறவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இதன் போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, சீன வெளிவிவகார அமைச்சர் வெங்க் யிக்கும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சுவீடன் வர்த்தக நிபுணர்கள் இலங்கையில்!
நாட்டின் கல்வித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவோம் – ஜனாதிபதி!
இந்தியாவின் தொடருந்து தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க சம்மதம் - இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ...
|
|
|


