யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஈ.பி.டி.பி கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆராய்வு!
Wednesday, April 3rd, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் யாழ் மாவட்ட மக்களின் அபிவிருத்திகள் மற்றும் கட்டுமாணங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள திட்ட வரைபுகள் தொடர்பாக கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்தித்து ஆராய்ந்தறிந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் தலைமையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது இவ்வாண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் கட்சியின் வடமராட்சி தென்மராட்சி தீவகம் உள்ளிட்ட பிரதேசங்களின் முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.
Related posts:
பேச்சுக்களில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை!
அட்டைகள் பற்றாக்குறை - சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதில் மக்கள் சிரமம்!
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த சீனா ஒருபோதும் முற்படவில்லை - ஜனாதிபத...
|
|
|



