கூட்டமைப்பினரின் சொந்த வாழ்வுக்காக வாக்களிக்க முல்லை மக்கள் இனியும் தாயாராக இல்லை – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் ஜெயராஜ்!

Wednesday, June 17th, 2020

கடந்த பல ஆண்டுகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சொந்த வாழ்வுக்காக வாக்களித்த தமிழ் மக்கள் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமது நலன்களையும் தமிழ்ச் சமூகத்தின் அபிலாஷைகளையும் முன்னிறுத்தி தமது எதிர்கால வாழ்வுக்காக வாக்களித்து வன்னி மாவட்டத்தின் சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஒரு உறுப்பினரையவது நாடாளுமன்றம் அனுப்பி எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கரங்களை பலப்படுத்தவர் என்ற நம்பிக்கை தனக்கு உண்டு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரும் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாருமான ஜெயராஜ் (கிருபன்) தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற பிரதேசத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் சார்பில் அம்மக்கள் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்திற்கு தமது பிரதிநிதியாக அனுப்பி வருகின்றனர். எமது தலைவரும் அந்த மக்களின் நம்பிக்கையை மட்டுமல்லாது ஏனைய தமிழ் மக்களின் சார்பிலும் தனக்கு வழங்கப்பட்ட அரசியல் அதிகாரத்தை கொண்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்த வந்துள்ளார்.

அதுமட்டுமல்லாது எமது வன்னி மாவட்டத்திற்கும் அவர் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துள்ளார்.

தற்போது கடற்றொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அடுத்துவரும் அமைச்டசரவையிலும் அமைச்சராகவே தொடர்ந்தும் செயற்படுவார். இதே ஜனாதிபதிதான் எமது நாட்டை குறைந்தது இன்றும் 5 வருடங்களுக்கு ஆட்சிப்பொறுப்பை மேற்கொள்ளவுள்ளார்.

அந்தவகையில் அந்த அரசுடன் நெருக்கமான உறவுகளைக்கொண்டுள்ள கடந்தகாலத்தில் இணக்க அரசியலை தமிழ் மக்களின் நலனுக்காக முன்னெடுத்துச் சென்று வெற்றிகண்டு எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கரங்களை பலப்படுத்துங்கள் என தெரிவித்த ஜெயராஜ் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சொந்த வாழ்வுக்காக வாக்களித்த தமிழ் மக்கள் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமது நலன்களையும் தமிழ்ச் சமூகத்தின் அபிலாஷைகளையும் முன்னிறுத்தி வாக்களிப்பால்கள் என்ற நம்பிக்கை தனக்கு உண்டு என்றும் அவ்வாறு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் முல்லை மண்ணிலிருந்து நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மக்கள் எமக்கு தருவார்களேயானால்  தமிழர் தேசமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் முதன்மையானதாக முல்லைத்தீவு மாவட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கிக் காட்டுவோம் எனவும் ஜெயராஜ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: