அமைச்சர் டக்ளஸ் முயற்சி – புங்குடுதீவு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு – ஆர்.ஓ கட்டமைப்பை புங்குடுதீவில் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் பொருத்த நடவடிக்கை!

Monday, February 14th, 2022

புங்குடுதீவு மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிச்சினையை தீர்க்கும் நோக்கில், கடல் நீரை நன்னீராக்கும் ஆர்.ஓ கட்டமைப்பை புங்குடுதீவில் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் பொருத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல இழுபறி நிலைக்கு மத்தியில் புங்குடுதீவு பகுதி பொது அமைப்புகள் மற்றும் அப்பகுதி வாழ் மக்களது வேண்டுகோளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அவசிய தேவைக்கும் அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் குறித்த திட்டம் புங்குடுதீவு பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதுதொடர்பாக கடற்படையினருக்கு சுகாதார அமைச்சினால் உத்தியோகபூர்வமாக எழுதப்பட்டுள்ள கடிதத்தில், யாழ் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஏழு ஆர்.ஓ. கட்டமைப்புகளில் ஒன்றை புங்குடுதீவிற்கு பொருத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, குறித்த திட்டத்திற்கு புங்குடுதீவு தெரிவு செய்யப்பட்ட போதிலும், சில அரசியல் தலையீடு காரணமாக அந்தத் திட்டத்தினை வேறு பகுதிக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எனினும், புங்குடுதீவு மக்களுக்கு குடிநீரை வழங்க வேண்டியதன் அவசரம் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் எடுத்துக் கூறப்பட்ட நிலையில், குறித்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ள சுகாதார அமைச்சு, ஏனைய பகுதிகளுக்கும் நீர் சுத்திகரிப்பு பொறிமுறையினை பொருத்துவதற்கான நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: