எரிபொருள் விலையை குறைக்குமாறு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம்!

Sunday, August 22nd, 2021

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளதால் எரிபொருள் விலையை குறைக்குமாறு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஜூலை 30 ஆம் திகதி 73 டொலருக்கு விற்கப்படும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 62 டொலராக குறைந்து விட்டதாக குறித்த இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சந்தையில் விலைகளின் அடிப்படையில் உள்ளூர் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதால், எரிபொருள் விலை இப்போது குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: