அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் கொரோனாவிலிருந்து 76 சதவீத பாதுகாப்பளிக்கிறது – மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகர் நோயெதிர்ப்பு நிபுணர் தகவல்!

Wednesday, March 3rd, 2021

சுகாதார அதிகாரிகளின் தரவின் அடிப்படையில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் ஒரு நபருக்கு கொரோனா வைரஸிலிருந்து 76 சதவீத பாதுகாப்பை அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவ சங்கம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் உரையாற்றிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகர் நோயெதிர்ப்பு நிபுணர் டாக்டர் தனுஷா தசநாயக்க, அஸ்ட்ராசெனகா இரண்டாவது டோஸ் முழுமையாக பாதுகாக்கும் என்றாலும் முதல் டோஸிலிருந்து ஒரு நபருக்கு ஒருவித பாதுகாப்பு இருப்பதை கண்டறிந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 10-12 வாரங்களில் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசிக்கான உடனடி எதிர்வினை பொதுவாக 48-72 மணி நேரம் நீடிக்கும் என்றும் பெரும்பாலும் இளைய தலைமுறையினரே மிருதுவான பக்க விளைவுகளை எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts: