சுகாதார சேவையில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க!

Thursday, May 26th, 2022

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுகாதார சேவையில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

தற்போது சுகாதார சேவையில் ஏற்பட்டுள்ள அவசர நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துப் பற்றாக்குறையை போக்க மருந்துகளை இறக்குமதி செய்யும் திட்டத்தை சுகாதார அமைச்சு தயாரிக்கவில்லை என சுகாதாரப் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எப்படியிப்பினும் இதற்கு முன்னர் விண்ணப்பம் செய்யப்பட்ட மருந்துகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் கிடைத்துவிடும் என அமைச்சர் கூறியுள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்காக ஒதுக்கப்படும் தொடர் செலவீனங்கள் குறைக்கப்பட மாட்டாது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக செயற்படுவதற்கு அத்துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் கருத்துக்களும் பெறப்பட வேண்டுமெனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு மருந்து பொருட்கள் எவ்வாறு விரைவாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்பது குறித்து மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான நிபுணத்துவ பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: