யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று மின்தடை!
Monday, October 3rd, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்கடலில் இன்று திங்கட்கிழமை(03) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி, தெல்லிப்பழை டச்சு வீதி, வறுத்தலை விளான், அச்செழு, காங்கேசன் துறை 5 ஆவது பொறியியல் படை முகாம், காங்கேசன் துறை வடக்கு கடற்படை முகாம், பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம், பலாலி விமானப் படை முகாம், பலாலி விமானப் படை ஓய்வு கால விடுதி, மயிலிட்டி கரிசன் 5 ஆவது பொறியியல் படை முகாம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
இணைப்பாளர்கள் பணம் கேட்டால் கொடுக்கவேண்டாம் - சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்!
வடக்கில் 7 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!
எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது - அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!
|
|
|


