முன்பள்ளி ஆசிரியர்களது வாழ்வியல் மேம்படுத்தப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளர் கண்ணன்!

Friday, December 2nd, 2016

எமது தேசத்தின் எதிர்கால சிறுவர்களது வாழ்வியல் சிறப்புற அமைவதற்கு ஏணிப்படிகளாக இருந்து அர்ப்பணம் செய்யதுவரும் முன்பள்ளி ஆசிரியர்களது வாழ்வாதார நிலைகள் உயர்வடைவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என  ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளர் வீரமுத்து கண்ணன் தெரிவித்துள்ளார்.

பேரம்பலம் முன்பள்ளியின் பரிசளிப்பபு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் –

DSC_1704

கடந்த ஆட்சிக்காலத்தில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பல சிறப்பான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதன்படி அவர்களுக்கான பல தேவைகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தன. அத்துடன் அவர்களுக்கு ஒரு நிலையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் இன்றுவரை வலியுறுத்தி வருகின்றார்.

வறுமையில் தாம் வாழ்ந்தாலும் தமது இளம் சந்ததியினர் சிறப்புடன் உருவாக்கப்படவேண்டும் என்ற எண்ணத்துடன் வாழும் இந்த முன்பள்ளி ஆசிரியர்களது வாழ்வியல் சிறப்பானதாக மாற்றப்படவேண்டும் என உரிய துறைசார்ந்தவர்களிடம் மக்களாகிய நீங்களும் வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

DSC_1715

மேலும் கடந்த காலத்தில் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் இப்பகுதியில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது மட்டுமல்லாது  வறிய மக்களது வாழ்வியலிலும் பாரியளவு  மேம்பாடுகளை ஏற்படுத்திக்கொடுத்திருதோம். ஆனால் தற்போது இவ்வாறான நலத்திட்டங்கள் மக்களுக்கு கிடைக்காமையால் தாம் பெரும்பெரும் அசௌகரியங்களை  எதிர்கொண்டுவருவதாக மக்கள் எமக்கு நாளாந்தம் தெரிவிக்கின்றனர். இன்நிலை மாறவேண்டுமானால் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். அதனூடாகவே மக்களனது வாழ்வியலும் மீட்சிபெறமுடியும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

DSC_1749

DSC_1736

Related posts: