தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் நாடாளுமன்ற ஒன்றியக் கூட்டத்தில் ஆராய்வு!

Friday, September 8th, 2023

தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் சில நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான நாடாளுமன்ற ஒன்றியக் கூட்டத்தில் கலந்துரையாடபட்டது.

தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்ற போது இந்த விடயம் கலந்துரையாடபட்டுள்ளது.

இதன்போது, குருந்தூர் விகாரை தொடர்பில் தொல்பொருளியல் திணைக்களம் மேற்கொண்ட தலையீடு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது, இலங்கையில் தொல்பொருளியல் பெறுமதி வாய்ந்ததாக அடையாளம் காணப்பட்டு, வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இடங்கள் மற்றும் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ள இடங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசேடமாக, மாவட்ட மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் இந்தத் தொல்பொருளியல் பெறுமதி வாய்ந்த இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், தொல்பொருளியல் நிதியமொன்றை ஆரம்பிப்பது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: