மோசடிகளுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு எதிராக புதிய சட்டம்!

Saturday, August 27th, 2016

நாட்டில் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விலைமனுக் கோரல் மோசடிகள் தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுக்கு தண்டனை விதிக்கப்படக்கூடிய வகையில் பொது முயற்சியான்மை சட்டமூலமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விலை மனுக் கோரல் மோசடிகளுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளததாகவும் குறித்த மோசடிகளுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரச நிறுவனங்களில் பணிப்பாளர்களாக கடமையாற்றி வரும் 34 நிதி அமைச்சு அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ள நிலையில் இந்த சட்டம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: