தமிழக முதல்வரின் மறைவால் கச்சதீவு அந்தோனியார் ஆலய புனிதப்படுத்தும் நிகழ்வு ஒத்திவைப்பு!
Tuesday, December 6th, 2016
புதிதாக கட்டப்பட்டுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் புனிதப்படுத்தும் திருவிழா தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யாழ். ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.
கச்சதீவில் புதிதாக புனித அந்தோனியார் ஆலயம் கட்டப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலயத்தின் புனிதப்படுத்தும் விழா நாளை (7) நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு தமிழக முதல்வர் செல்வி ஜெயராம் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார். இதனையடுத்து புனிதப்படுத்தம் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யாழ் ஆயர் இல்லம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் விலையும் குறைக்கப்படும்!
யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகின்றது “கரிகோச்சி”
வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ தொற்றால் உயிரிழப்பு!
|
|
|


