முன்பள்ளி சிறுமியின் விரல் அகற்றப்பட்டது. குறித்து விசாரணை!
Saturday, November 18th, 2017
நெல்லியடிப் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் சிறுமி ஒருவருக்கு காயம் ஏற்பட்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேற்படி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் நான்கு மாதங்களிற்கு முன்னர் முன்பள்ளியில் கற்று வரும் சிறுமி; ஒருவரிற்கு இரண்டு விரல்களில் கடும் காயம் ஏற்பட்டதையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 20.07.2017 அன்று அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு விரல் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மற்றைய விரல் தொடர்ந்தும் இயங்க முடியாமல் உள்ளமையினால் நான்கு மாதங்களின் பின்னர் இது தொடர்பில் சந்தேகம் கொண்ட சிறுமியின் பெற்றோர் கரவெட்டி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கடந்த புதன்கிழமை தெரியப்படுத்தியதையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Related posts:
இடியுடன் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்!
கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 7 பேர் பலி - நோயால் பீடிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையும் அதிகரிப்ப...
அத்தியாவசிய உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகால விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனாதிப...
|
|
|


