மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாக இருக்காது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

Friday, November 18th, 2022

குழுநிலையின் போது சில திருத்தங்கள் செய்யப்பட்டால், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு வருமான சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாதாக அமையாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த மாதம், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்துவதற்காக உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி பல வரிகளை திருத்துவதற்கு முன்மொழிகிறது மற்றும் வரிகளை வசூலிப்பதற்கும் அரசாங்கத்தின் சார்பாக வரிகளால் எழும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கும் முதன்மை முகவராக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு மேலும் அதிகாரம் அளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: