தேர்தல் வாக்களிப்பு பொறிமுறையில் மாற்றம் – ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா தெரிவிப்பு!

Friday, December 25th, 2020

தேர்தல் வாக்களிப்பு பொறிமுறையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள், ஊகவியலாளர்கள், தேர்தல் காலங்களில்  அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடுபவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாக்களிப்பில் பங்கேற்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை இது தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு  பிரதமர்  இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறித்த விசேட பொறிமுறை தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதுடன் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஊடாக சட்டமியற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 000

Related posts:

ஈ.பி.டி.பியின் முயற்சியால் திருமலை சின்னத்தோட்ட குடியிருப்பாளர்களுக்கு 2017இல் நிரந்தர வீடுகள்!  
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரக்கொட இந்திய குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்கள் கைய...
சிங்கப்பூருக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்கும் நாடாக இலங்கை விரைவில் மாறும் - இராஜாங்க அமைச்...