நியாயமான முறையில் பொதுத் தேர்தல்களை நடத்துங்கள் – பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்து!

Friday, September 15th, 2023

நியாயமான முறையில் பொதுத் தேர்தல்களை நடத்துமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தேர்தல் திகதிகள் குறித்த நிச்சயமற்ற நிலை நீடிப்பதால் பாகிஸ்தானின்; இடைக்கால ஜனாதிபதி ஆரிப் அலிக்கு வெள்ளை மாளிகையினால் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன், மக்களின் அடிப்படை உரிமைகளை மதித்து, சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்தும்படியும் குறித்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே நவம்பர் 6 ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்தும்படி தேர்தல் ஆணையத்திற்கு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஆகஸ்ட் 9ம் திகதி பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது அந்நாட்டின் அரசியல் சட்டத்தின்படி கட்டாயமாகும்.

எனினும் தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதால் திகதிகளை அறிவிப்பதில் தாமதம் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: