மருத்துவ சபையின் புதிய தலைவர் நியமனம் தொடர்பில் குற்றச்சாட்டு!

Saturday, July 29th, 2017

இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக மாலபே சைட்டம் கல்லூரியில் இருந்து பணம் பெற்று கொண்ட ஒருவரை சுகாதார அமைச்சர் நியமிக்கவுள்ளமையானது பிரச்சினைக்குரிய விடயம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

இந்த குற்றச்சாட்டை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே முன்வைத்துள்ளார்இதன்மூலம் சைட்டம் தொடர்பாக நிலவும் பிரச்சினை மேலும் தீவிரமடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக புகையிலை நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயற்பாடானது உலக நியதியை மீறும் செயல் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: