டெங்கை ஒழிக்க ஒருமணி நேர சுத்திகரிப்பு !

Friday, June 16th, 2017

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 9.30 முதல் 10.30 வரையில் ஒரு மணித்தியாலும் சுத்திகரிப்பு மணித்தியாலமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது

இதன்படி அரச, தனியார் நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று முதல் இந்த சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது’

இதேவேளை, டெங்கு பரவலை தடுக்கும் நோக்கில், நெங்கு நுளம்புகளை அழிப்பதற்காக தற்காலிகமாக அவசரநிலைமையை பிரகடனப்படுத்துமாறு, சுகாதார அமைச்சர், ஜனாதிபதியிடம் கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சுகாதார அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளத. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு நோயினால் 62 ஆயிரத்து 857 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 160க்கும் அதிகமானவர்கள் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: