ஊழிர்களின் நலன் கருதி பொதுப் போக்குவரத்து சேவையில் 5700 பேருந்துகள் – இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Monday, May 11th, 2020

இன்றையதினம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் நலன் கருதி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5,700 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக. இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

மேலும்  கொரோனா வைரஸ் ஆபத்து அதிகளவில் அல்லாத 21 மாவட்டங்களில் சுமார் 3,000 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்திலும், புத்தளம் மாவட்டத்திலும் 2,700 பேருந்துகள் சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவித்துள்ளது.

அதேநேரம் மறுஅறிவித்தல் வரும் வரையில் நீண்ட தூர மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்துச் சபை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: