எல்லைதாண்டிய கடற்றொழிலை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்பு போராட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் மகஜர் கையளிப்பு!

Monday, September 14th, 2020

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடுவதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து இன்றையதினம் வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்பு போராட்டம்  ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இன்று காலை நல்லூர் முன்றலில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேரணியாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது யாழ் மாவட்ட அலுவலகத்திற்கு சென்றடைந்தது. அங்கு அமைச்சருக்கான மகஜரை அமைச்சரின் இணைப்பு செயலாளர் தோழர் ஸ்ராலினிடம் கையளிதிதிருந்தனர்.

குறித்த மகஜரில் இந்திய மீனவர்களது அத்துமீறல் தொடர்பில் தெரியப்படுத்தி, இதனால் தமது வாழ்வாதாரப் பாதிப்பு மற்றும் உடமைகள் சேதமாக்கப்படுவது தொடர்பில் எடுத்துக் கூறி எல்லை தாண்டுவதை தடுத்து நிறுத்துமாறு  வலியுறுத்தியுள்ளனர்.

முன்பதாக குறித்த போராட்டக்காரர்கள் இந்தியத் தூதரகத்தைச் சென்றடைந்து, அங்கு இந்தியத் துணைத் தூதரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘இந்திய இழுவைப் படகே எமது எல்லைக்குள் வராதே’, ‘இலங்கை அரசே தடை செய்யப்பட்ட தொழில்களை நிறுத்து’ உள்ளிட்ட பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: