அஞ்சல் நிலயங்களை மூடுவது உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Tuesday, June 9th, 2020

மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் சனிக்கிழமைகளில் அஞ்சல் நிலயங்களை  மூடுவது உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன நிர்வாக அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் அஞ்சல் பணியாளர்கள் நேற்று முன்தினம் முதல் மேலதிக நேர பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துவருகின்றனர்.

ஐக்கிய தேசிய அஞ்சல் பணியாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் எச்.ஏ. ஆர் நிஹால் இதனை தெரிவித்துள்ளார்.

அஞ்சல் பணியாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவை தவிர்ப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானம் மற்றும் சனிக்கிழமைகளில் அஞ்சல் நிலையங்களை மூடுவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிபகிஸ்கரிப்பு இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: